அஹமதாபாத்தில், இடம்பெற்ற விமான விபத்தில்
இதுவரை 133 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை ஏராளமானோர் படுகாயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால், அங்கிருந்த கட்டடங்களிலும் தீப்பற்றி எரிந்தது.
விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், குறித்த விமானத்தில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகவும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.