நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது.எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட ஒருவருடன் தன்னால் பேச முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், தற்போது எலோன் மஸ்க்குடன் பேசத் திட்டமிடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் மஸ்க் வலுயுறுத்தியுள்ளார்.