Our Feeds


Tuesday, July 29, 2025

Zameera

பஸ்,லொறி மோதியதில் யாத்ரீகர்கள் 18 பேர் பலி

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று செவ்வாய்கிழமை (29) அதிகாலை 4.30 மணி அளவில் பஸ்ஸூம், லொறியும் மோதிக் கொண்ட விபத்தில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மோகன்பூர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதி அருகே ஏராளமான கன்வார் யாத்ரீகர்களுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று கேஸ் சிலிண்டர் ஏற்றியபடி வந்துகொண்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் 18 பேர் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸாரும், மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்ற. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த விபத்து உணர்த்துகிறது என அறிவுறுத்தப்படுகின்றது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »