Our Feeds


Sunday, July 20, 2025

Zameera

பொலிஸ் அதிகாரிகளில் 40% பேர் தொற்றா நோய்களால் பாதிப்பு

 

அடுத்த ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே பதில் பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

"பொலிஸ் அதிகாரிகளைப் பார்த்தால், 20% முதல் 40% பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏனைய 30% பேருக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை. 

மீதமுள்ள 30% பேர் ஏதேனும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனெனில் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகள், வேலைப் பிரச்சினைகள், இவை அனைத்தும் அவர்களைத் தொற்றா நோய்களால் பாதிக்கச் செய்துள்ளன. 

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகள் மேம்படுத்தப்படும். பொலிஸ் அதிகாரிகளால் செய்யப்படும் பணிகள் மிக உயர்ந்த தரத்திற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். 

பொலிஸ் அதிகாரிகள் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்கள். அந்த சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியின் அவதானம் வரை கொண்டு செல்லப்பட்டது.


அந்த அவதானத்திற்கு அமைய அடுத்த ஆண்டு புதிய சம்பள அமைப்பைத் தயாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »