Our Feeds


Wednesday, July 30, 2025

Zameera

நுவரெலியா தற்காலிக பெண்கள் காப்பகத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் திறந்து வைத்தார்

 

நுவரெலியா தற்காலிக பெண்கள் காப்பகத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் திறந்து வைத்தார்.


புதிய அரசாங்கம் அமைக்க பட்டதில் இருந்து குறுகிய காலத்திற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக்கு சாதகமான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி பால் ராஜ் கூறினார்.


நேற்று  (29) நுவரெலியா தற்காலிக பெண்கள் காப்பகத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.


வீட்டு வன்முறையை எதிர்த்துப் போராடவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு தேவையான மசோதாக்களைக் கொண்டுவரவும், அனாதைகள் மற்றும் நன்னடத்தையில் உள்ள குழந்தைகளுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 


வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு, குறுகிய காலத்திற்கு வீடுகளை விட்டு வெளியேறி, அரசின் பாதுகாப்பு மற்றும் சமூகமயமாக்கலுடன் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தற்காலிக பெண்கள் தங்குமிடங்கள் மூலம் தங்க வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தற்போது 10 தங்குமிடங்கள் இருப்பதாகவும், இன்று நுவரெலியாவில் திறக்கப்பட்ட பெண்கள் தங்குமிடத்துடன், இது 11 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுஷ்கா சஜீவானி மற்றும் கலை செல்வி, பொது பிரதிநிதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், இலங்கை மகளிர் பணியகத்தின் இயக்குநர் சஜீவானி பெரேரா, அரசு அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள UNFPA பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மஸ்கெலியா நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »