Our Feeds


Saturday, July 19, 2025

Zameera

தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்


 முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.


பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரிப்பது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளது.


தேசபந்து தென்னகோன் செய்ததாகக் கூறப்படும் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சமீபத்தில் சாட்சியமளிப்பு பணியை முடித்தது.


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி நீல் இத்தவால மற்றும் தேசிய காவல் ஆணையத்தின் தலைவர் ஈ.டபிள்யூ.எம். லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »