Our Feeds


Saturday, July 19, 2025

Zameera

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்






 37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் இன்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார்.


சஞ்சிதாவத்தையில் வசித்து வரும் இவர் மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாக கொண்டவர் இவர் சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலையில் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தை பெற்று 1988 ஆம் ஆண்டு 08 ஆம் மாதம் 06 ஆம் திகதி தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 


அதன் பின்னர் நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா போன்ற பாடசாலைகளில் அதிபராக, பிரதி அதிபராக தனது கடமைகளை திறம்பட செய்து இருந்தார்.


இவருக்கான பிரியாவிடை வைபவம் நுரைச்சோலை தேசிய பாடசாலையில் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் M.I இம்ரான் கான் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதி அதிபரான S.H.M நபீஸ், உப அதிபர்களான N.T.M தாரிக், M. இக்பால் உட்பட பகுதி தலைவர்கள்,  ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »