இன்று, 31.07.2025, அதிகாலை 05.30 மணியளவில், கினிகத்தேன பொலிஸ் பிரிவின் மில்லகஹமுல்ல பகுதியில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற BGK 3662 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மோட்டார் சைக்கிள், அதே வீதியில் பயணித்த CP.LJ 7026 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொரியை முந்திச் செல்ல முயன்றபோது கவிழ்ந்தது.
இந்த மோட்டார் சைக்கிள், கொழும்பு 10, மொஹிதீன் மஸ்ஜித் சாலை A/6 ஐச் சேர்ந்த இக்ராம் மிஸ்கி மற்றும் அவரது மனைவி ஜனிரா இக்ராம் ஆகியோருக்கு சொந்தமானது.
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து லொரியின் பின் சக்கரத்தின் கீழ் நசுங்கிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் இக்ராம் மிஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டு கினிகத்தேன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து சம்பந்மாக கினிகத்தேன பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
