அரசாங்கத்திற்குள் ஊழல் மற்றும் மோசடி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சிக்குள் ஊழல் மற்றும் மோசடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு பொய்களைப் பரப்புவதன் மூலம் வழக்கமான அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.
ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கை அளிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.