நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
396 இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாத 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வரையான காலப்பகுதியில், 111,031 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 2,999 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.