Our Feeds


Thursday, July 3, 2025

Sri Lanka

அனுர, இனியும் எமக்கு அனுதாபங்கள் வேண்டாம் - மனோகணேசன்!


அனுர, இனியும் எமக்கு அனுதாபங்கள் வேண்டாம். 

என் விவாதத்தில் எனக்கு நீங்கள் தந்த காணி, வீடு, சம்பளம், உள்ளிட்ட மூன்று உறுதி மொழிகளை  நிறைவேற்றுங்கள்!

மலையகம் தொடர்பில் 2024ம் வருடம், TPA தலைவராக நான் கொண்டு வந்த முழு நாள் பிரேரணை விவாதத்தில் அனுரகுமார உரையாற்றுகிறார்.

அனுரவுக்கு அருகில் அமர்ந்து அவருக்கு சில தெளிவுகளை வழங்கும் என் குரலும் இடைக்கிடை இந்த காணொளியில் கேட்கிறது. 

"வெள்ளைக்காரனின் கொத்தடிமை நடை பயணத்தில் ஆரம்பித்து" அனுர என்னை நோக்கி தந்த உறுதி மொழிகளில் முக்கிய புள்ளிகள். 

1) தரிசு காணி பகிர்ந்தளிக்க வேண்டும்.
2) குடியிருக்க தரமான வீடுகள் வழங்க வேண்டும்.
3) நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.
4) சம்பளம் தராத கம்பனிகளை அரசுடைமை ஆக்க வேண்டும்.  

இன்று பாராளுமன்றம் வந்துள்ள புதிய  "மலையக" NPP எம்பிக்களுக்கு இவை தெரீயுமோ? தெரியாது?

"JVP" காரராக புது அவதாரம் எடுத்துள்ள PVS என்ற பொது வெளி சாமான்களுக்கு நிச்சயமாக தெரியாது.

பலர் முட்டாள்தனமா நினைப்பதை போல, நாம் (TPA) 40 வருஷங்கள் மாறி மாறி வந்த எல்லா நீலம், பச்சை அரசுகளிலும் அங்கம் வகிக்கவில்லை.

நாலே (4) வருடங்கள் மட்டுமே, ஆட்சியில் TPA அங்கம் வகித்தது. 

அந்த குறுகிய காலத்திற்குள்,  (1)காணி, (2)வீடு, (3)பத்தாயிரம் (10,000) இந்திய வீடமைப்பு திட்டம், கேட்டு பெற்றமை (4) மேலதிக பிரதேச சபை,  (5) மேலதிக பிரதேச செயலகம், (6) பிரதேச சபை அதிகார வரம்பின் கீழ் தோட்டங்கள், (7) பாடசாலை கட்டிடங்கள், (8)ஆசிரியர் நியமனம், (9)மலையக அதிகார சபை,  (10) நிலவரம்பற்ற சமூக சபை அரசியலமைப்பு  பிரேரணை என பற்பல முன் எடுப்புகளை சட்டப்படி நாம் ஆரம்பித்தோம்.  

200 வருட சாபத்தை, நாலே (4) வருஷங்கள்ல தீர்க்க முடியாதுன்னு குழந்தைக்கும் விளங்கனும். அதே மாதிரி நாம் எமது பயணத்த தூர நோக்கில் ஆரம்பிச்சு விட்டோம்னும், எல்லாருக்கும் விளங்கனும். 

இன்று, நான் ப்ரதர் அனுரவிடம் சொல்வது இதான். 

Bro, இனியும் எமக்கு அனுதாபங்கள் வேண்டாம். 

எமது TPA ஆரம்பித்த பயணத்த முன்னே கொண்டு போங்க. என் விவாதத்துல எனக்கு நீங்க தந்த "காணி, வீடு, சம்பளம்" உறுதி மொழிகளை நிறைவேத்துங்க.

அவ்வளவுதான். 

#மனோகணேசன் 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »