Our Feeds


Sunday, July 20, 2025

Zameera

உலக அறிவுசார் சொத்து விருதைப் பெற்ற நதீஷா சந்திரசேன நாடு திரும்பினார்


 ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வழங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான “உலக அறிவுசார் சொத்து உலகளாவிய விருதுகள் விழாவில் ”சுற்றுச்சூழல் பிரிவு" விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, நாடு திரும்பியுள்ளார். 


அவர் நேற்று (19) இரவு நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கலாநிதி நதீஷா சந்திரசேன, நகரங்களில் திறந்தவெளி வடிகால்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தேங்குவதால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க இந்த வடிகால் வெற்றிகரமான தீர்வுகளை வழங்கியுள்ளது என்று கூறினார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

"ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பிலிருந்து 2025 உலக அறிவுசார் சொத்துரிமை விருதை எனது குழு பெற்றது. 

எங்கள் குழு புதுமையாக உருவாக்கிய ஸ்மார்ட் வடிகாலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 

ஸ்மார்ட் வடிகால் என்பது நகரங்களில் திறந்தவெளி வடிகாலமைப்பில், வெள்ளநீர் வடிந்தோடும் போது, அவற்றில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகிவை சிக்குவதை தடுப்பதற்கான புதிய திட்டமாகும். 

இந்த ஸ்மார்ட் வடிகால் அமைப்பு, அடைபட்டிருக்கும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக்கை வடிந்தோடும் மழை நீரிலிருந்து வேறுபடுத்தி, மழைநீரை இரண்டாவது தட்டு வழியாகப் வௌியேற்றும் முறைமையாகும். 

இதை உலகின் முதல் இரண்டு தள ஸ்மார்ட் வடிகால் என்று நாம் அழைக்கலாம்." என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »