ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள்
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தனது கடமை தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் அரச புலனாய்வு துறை (SIS) தலைவர் நிலந்த ஜெயவர்தனை பொலிஸ் ஆணைக்குழு பணிநீக்கம் செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
அவர்கள் மீதும் நீதித் தீர்ப்பு எடுக்கப்பட வேண்டும் என்றும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
