சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள்
அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ, முன்னாள் விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று திங்கட்கிழமை (21) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சதொச நிறுவனத்தின் ஊடாக கரம் போர்ட்கள் மற்றும் டாம் போர்ட்கள் இறக்குமதி செய்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன மூன்று பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஆனால், அவர்களுக்கு ஏற்கனவே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையினால் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
