Our Feeds


Sunday, July 20, 2025

SHAHNI RAMEES

பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டார் நிலந்த ஜெயவர்தன!

 

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட  முன்னாள்  அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன  பொலிஸ் சேவையில்  இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது.

நிலந்த ஜெயவர்தனவை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணிப்புரையை, பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது.

நிலந்த ஜெயவர்தன தனது கடமையை புறக்கணித்ததாகவும், குற்றவியல் குற்றத்தைச் செய்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது. 


அதன்படி, நிலந்த ஜெயவர்தன, மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »