தாய்லாந்தும், கம்போடியாவும் தங்கள் எல்லைகளில் வன்முறை மோதல்கள் தொடர்பில், உடனடி போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமைதியை மீட்டெடுக்க கம்போடிய பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் இருவருடனும் தாம் பேசியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தக மேசைக்கு எதிர்பார்க்கிறார்கள்.
எனினும், சண்டை நிறுத்தப்படும் வரை அதனை மேற்கொள்வது பொருத்தமற்றது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பைத் தாம் ஏற்பதாக கம்போடியா அறிவித்துள்ளது.
எனினும் இந்த விடயத்தில் கம்போடியாவின் நேர்மையான நடத்தையும் விரைந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தாம் தயாராக இருப்பதாகத் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எல்லை முறுகல்கள் தொடர்பில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் 33 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 168,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
