அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, வேலையின்மை வீதம் ஒரு வருடத்துக்கு முன்பு 4.5% ஆகவும், முந்தைய காலாண்டில் 4.2% ஆகவும் இருந்தது.
இதனிடையே, ஆண்டின் முதல் காலாண்டில் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 8.13 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டு 7.90 மில்லியனாக பதிவாகியிருந்தது.
அதற்கமைய, கடந்த 12 மாதங்களில் சுமார் 237,912 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில்துறையில் 2.15 மில்லியனாகவும், சேவை துறையில் 4.09 மில்லியனாகவும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள அதே நேரத்தில் விவசாயத் துறை வேலைவாய்ப்பு 1.91 மில்லியனாகக் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நாணய நெருக்கடி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, ஏற்பட்ட நெருக்கடியின் உச்சத்தில், 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
