ஆசனப்பட்டி அணிவதால் விபத்து, காயங்களை சுமார் 45 வீதம் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
ஆசனப்பட்டி அணிவது பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதற்கும் பயணிகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுகிறது என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களைப் பாதுகாப்பான போக்குவரத்திற்குப் படிப்படியாகப் பழக்கப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.
நேற்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வீதிகளிலும் பயணிக்கும் பேருந்து ஓட்டுநர்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
