யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வாக விலங்குகளுக்கு உணவு உற்பத்தி செய்வது அவசியம் என்று விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த சுட்டிக்காட்டுகிறார்.
மனிதகுலத்திற்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வனவிலங்குகளுக்கான உணவு ஆதாரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுத்தியுள்ளார்.
இந்த மோதலுக்கு முக்கிய காரணம் உணவுப் பற்றாக்குறை என்று அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த காலங்களில், விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை காட்டு விலங்குகளின் உணவுத் தேவைகளுக்காக ஒதுக்கி வைத்தனர் என்றும், அந்த அணுகுமுறை நவீன தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் கே.டி. லால் காந்தா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
