Our Feeds


Monday, August 18, 2025

Zameera

நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பின் கிரிக்கட் சுற்றுப்போட்டி; இலங்கை தூதுவர் பங்கேற்பு


கத்தாரில் இயங்கி வரும் நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கர்ராபாவிலுள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலையின் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர்  சித்தாரா கான் அஸார்ட் அவர்கள் பங்கேற்றார். கௌரவ அதிதியாக தொழிலதிபரும், சமூக சேவகருமான அஷ்ஷேஹ் ABM நவாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர், கவிக்கோ ஜின்னா ஷரீபுத்தீன் உள்ளிட்ட பலருக்கும் பிரதம அதிதியானால் ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டி சிறப்பாக ஆரம்பமாகின. நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் Negame Sky Riders மற்றும் Negame Wild Hitters ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய நிலையில் Negame Sky Riders அணியினர் மேலதிக 5 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக Negama Sky Riders அணியின் மிஃராஜ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 ஜே.எம்.பாஸித் - கத்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »