முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சரியான சட்ட நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹரிணி அமரசூரிய பிரதமராகும் முன்னர் தாம் அவருடன் நட்புடன் இருந்திருந்தாலும், தற்போது பிரதமராக பதவி வகிக்கின்ற போது அதற்குரிய மரியாதையை வழங்குவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஆனால், நாட்டின் பிரதமராக இருந்துக் கொண்டு அவர் ஒரு யூடிபருடன் கைக்குலுக்கி பொது வெளியில் நடந்து கொண்ட முறை பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் அதே யூடிபரே முன்னாள் ஜனாதிபதி இன்று கைது செய்யப்படுவார் என கூறியிருக்கிறார்.
அவ்வாறாயின் அரச தரப்பில் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னுடைய யூடிப்பை பிரபலப்படுத்துவதற்காக செயற்படும் ஒருவர் எவ்வாறு இந்த கைது சம்பவம் குறித்து கூற முடியும்.
எனவே இந்த அரசாங்கம் புதிய கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கின்றதா என்றும் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
