Our Feeds


Friday, August 29, 2025

SHAHNI RAMEES

கிளப் வசந்த படுகொலை ; “டெட்டு மல்லி” பிணையில் விடுதலை!

 

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதலாவது சந்தேக நபரான “டெட்டு மல்லி” என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு ஹோமாகம மேல்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “டெட்டு மல்லி” இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, “டெட்டு மல்லி” என்பவரை 150,000 ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 250,000 ரூபா பெறுமதியானஇரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கிளப் வசந்த என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த போது சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், “டெட்டு மல்லி” என்பவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »