Our Feeds


Friday, August 8, 2025

SHAHNI RAMEES

வேண்டாம்! - IDF தலைவர் நெதன்யாகுவிற்கு எச்சரிக்கை!

 


இஸ்ரேல் முழு காசாவையும் இராணுவக் கட்டுப்பாட்டில்

எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேல் காசாவில் உள்ள "ஹமாஸை அகற்றுவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், பின்னர் அந்தப் பகுதியை "ஹமாஸ் அல்லாத ஒரு சிவில் அரசாங்கத்திடமும், அல்லது அரபு நாடுகளின் ரானுவத்திடம் ஒப்படைப்பதாகவும் அவர் கூறினார்.


ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், செவ்வாய்க்கிழமை மாலை நெதன்யாகுவுடனான சந்திப்பில், காசாவை முழுமையாகக் கைப்பற்றுவது இராணுவத்தை அந்த பகுதிக்குள் சிக்க வைத்து, மீதமுள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்று எச்சரித்ததாக பல வட்டாரங்கள் CNN இடம் தெரிவித்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »