இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டுக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 18,299 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது 29.2 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதத்தில் சீனாவிலிருந்து 5,417 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,874 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,804 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 2,954 பேரும் வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இவ் ஆண்டின் இதுவரையாக காலப்பபகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,788,235 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், இந்தியாவிலிருந்து 292,633 பேரும், இங்கிலாந்திலிருந்து 166,767 பேரும், ரஷ்யாவிலிருந்து 125,035 பேரும், ஜேர்மனியிலிருந்து 110 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 107,007 பேரும் வருகை தந்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 158,971 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர், இதனை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்த தரவுகளுடன் ஒப்பிடும்போது 30.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.
