Our Feeds


Wednesday, October 22, 2025

SHAHNI RAMEES

நாளை (23) கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேரம் நீர் வெட்டு



கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில்

நாளை (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 


நாளை காலை 10.00 மணி முதல் அன்றைய தினம் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 


அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »