Our Feeds


Wednesday, October 22, 2025

SHAHNI RAMEES

சபைக்குள் - துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி!

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். 

அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். 

துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 

வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

படுகாயமடைந்த பிரதேச சபைத் தலைவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »