முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வாகனத்தை ஒப்படைக்கும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றதாக எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு வாகனமானது துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்ததால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார்.
