Our Feeds


Thursday, October 16, 2025

Zameera

இந்தியா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.


இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.


பிரதமர் தனது விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.


ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »