பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தான் கல்வி கற்ற புது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அவர், "இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது" என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும், இந்தக் கொள்கை "புனிதமானது" என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை நிலைநிறுத்தி வருகிறது என்றும், இக்கொள்கை "புனிதமாக" (sacrosanct) நிலைத்திருக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
