Our Feeds


Saturday, November 29, 2025

Zameera

யாழில் 4,140 பேர் பாதிப்பு


 யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 


நேற்று (28) மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி, 

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேரும், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேரும் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

அதேநேரம் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »