தடுக்கப்பட்டுள்ள குர் ஆன் பிரதிகளை வெளியிலெடுக்கும் முயற்சி
:📌ஜனாதிபதிக்கு நேரடியாக தெளிவூட்ட தீர்மானம்.
📌மீளாய்வு குழுவை கலைக்கவும் கோரிக்கை.
சவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு பின்னர் இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவித்து மக்கள் மயப்படுத்துவது தொடர்பான இறுதி முடிவை எட்டுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று இரவு கொழும்பு, ரோஸ்விலா மண்டபத்தில் நடைபெற்றது.
We are one அமைப்பு நடத்திய இந்த நிகழ்வில் அனைத்துக் கட்சி முஸ்லிம் MP க்கள், முன்னாள் MP க்கள், உலமாக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், ருஷ்தி ஹபீப் ஆகியோரின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்ட ரீதியாக குர்ஆன் பிரதிகளை விடுவிக்கும் முறை தொடர்பில் சபைக்கு சட்டத்தரணிகள் தெளிவூட்டினார்கள்.
மேலதிகமாக, இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிக்கும் இப்பயணத்தில் குறித்த பிரதிகளை விடுவிக்க “மீளாய்வு குழு” விதித்துள்ள 30 வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளை சேர்ப்பது என்றொரு நிலை வந்தால்,
குர் ஆன் பிரதிகளை விடுவிக்கும் பட்சத்தில் அவற்றுக்கான விளக்கக் குறிப்புகளை ACJU மூலம் பெற்று குறித்த பிரதிகளில் இணைப்பதற்கு We are One அமைப்பு பொறுப்பேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. - AlhamdhuLillah


.jpeg)


.jpeg)



