Our Feeds


Saturday, November 8, 2025

Zameera

டி.என்.ஏ கட்டமைப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வொட்சன் காலமானார்

DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் (James Watson) காலமானார். அவர் இறக்கும்போது 97 வயதில் இருந்தார். 

20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் DNA இன் இரட்டைச் சுருள் வடிவத்தை அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் உடன் இணைந்து 1953 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். 

அவர்கள் இருவரின் இந்தக் கண்டுபிடிப்பு மூலக்கூறு உயிரியலின் அதிவேக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது. 

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »