வெலிமடைப் பகுதியில் 12 வயது சிறுவன் சஹ்தி உயிரிழந்தமை
குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகம் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.சிறுவன் கல்வி பயின்று வந்த மதரஸாவின் குளியலறைக்குள் அந்தச் சிறுவன் இறந்து கிடந்துள்ளான்.
சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது கூறப்பட்டது.
நேற்று(14) வெலிமடைப் பள்ளிவாசல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதிவாசிகள், சிறுவனின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஊடகங்களிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், “அந்தச் சிறுவன் நவம்பர் 03 ஆம் திகதி இறந்து கிடந்தான். அந்தச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. அது ஒரு மர்மமாக இருக்கிறது. இவ்வளவு சிறிய குழந்தை எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.
