Our Feeds


Saturday, November 15, 2025

Zameera

இலங்கை - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து


 அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (14) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 
பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா - இலங்கை பாதுகாப்பு உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிப்பதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தோ - பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை இராணுவ ஒத்துழைப்புக்கு இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிக்கோடிட்டு காட்டுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »