UPS சரக்கு விமானம் கென்டக்கியில் உள்ள US A. லூயிஸ்வில்லி
சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் போது விபத்துக்குள்ளான பல மணி நேரங்களுக்குப் பிறகும் பெரும் தீ பரவி எரிந்து வருகிறது.உள்ளூர் அதிகாரிகள் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர், மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 11 பேர் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர், பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அடர்த்தியான புகை மற்றும் நச்சு புகை அருகிலுள்ள சுற்றுப்புறங்களில் பரவுவதால் வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விமானத்தில் 1 லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றிச்செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
யு.பி.எஸ் நிறுவனம், ஹவாய் செல்ல வேண்டிய விமானம் 2976 இல் மூன்று பணியாளர்கள் இருந்ததாக தெரிவித்தது. மூவரும் இன்னும் கணக்கில் இல்லை.
யு.எஸ். ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்ததாக தெரிவித்தது. பல கவுண்டிகளில் இருந்து அவசரகால பணியாளர்கள் தீயை அணைக்கவும், உயிர் பிழைத்தவர்களை தேடவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
