Our Feeds


Wednesday, November 5, 2025

SHAHNI RAMEES

நியூயோர்க்கை ஆளப்போகும் முஸ்லிம் மேயர்! சஹ்ரான் மம்தானி

 


நியூயோர்க் நகர முதல் முஸ்லிம் மேயராக சஹ்ரான்

மம்தானி தெரிவு.!

ட்ரம்பின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அபார வெற்றி.!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக சொஹ்ரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக சொஹ்ரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.

ஒக்டோபர் 25 ஆம் திகதி தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் சொஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சொஹ்ரான் மம்தானிதான், நியூயோர்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயராகவும், தென்னாபிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, சொஹ்ரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »