ஐஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
