தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அலவத்துகொடை
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மண்சரிவில் மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள போதிலும், அது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நிவாரணக் குழுக்களால் கூட அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அலவத்துகொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
