நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இதற்கமை, ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த – நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் என்று, நிந்தவூர் பிரதேச சபைக்கான தெளிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று பிரகடனப்படுத்தியுள்ளார்
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகவும் ஆதம்பாவா அஸ்பவர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது, அந்தக் கட்சி உறுப்பினரான அஸ்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முடிவுக்கு மாற்றமாக நடந்து கொண்டதோடு, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவுடன் தவிசாளராகத் தெரிவாகியிருந்தார்.
