சட்டவிரோத மதுபானத்தை பாக்கெட் செய்து தூர சேவை பஸ் ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ, வைக்கால பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நேற்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேகநபர் தனது கணவருடன் இணைந்து மதுபானம் பாக்கெட் செய்து கொண்டிருந்ததுடன், அவரிடமிருந்து 96 கசிப்பு போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூர சேவை பஸ் ஊழியர்களுக்கு மதுபானப் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கசிப்பு தொகையையும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
