மாத்தளையில் மண்சரிவு, பாறைகள் விழும் அபாயம் அதிகரித்துள்ளமையால் அப் பகுதியிலிருந்து 400 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (11) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இந்த அபாயம் அதிகரித்துள்ளது.
மேலும் தொடந்தெனிய மலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் பாறைகள் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
