(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு மாநகரசபை தோற்கடிக்கப்பட்டிருப்பது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டத்தை அல்ல. மாறாக உங்களது மனசாட்சியின் வரவு செலவு திட்டத்தையாகும். நீங்கள் செய்தது சரியா? என உங்களை நீங்கே கேட்டுப்பாருங்கள் என கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை (22) தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொழும்பு மாநகரசபை, வரவு செலவு திட்ட வாக்களிப்பின்போது கொழும்பு வாழ் மக்கள் தொடர்பாகவே தீர்மானித்திருக்கிறது.நாங்கள் கடந்த 6 மாதங்களாக தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ், இந்த சபையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கைகளை நீட்டினோம். அனைத்து உறுப்பினர்களுடன் மிகவும் நற்புடனும் அன்பாகவும் கட்சி பேதமின்றி கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டாேம்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரத்தின் (யூஎஸ் அய்ட்) நிதியின் குறைபாடுகள் தொடர்பில் நாங்கள் மிகவும் சிறந்த முறையில் கையாண்டோம். யாருக்காவது பிரச்சினை இருந்தால், கட்சி பேதமின்றி நாங்கள் அதுதொடர்பில் செயற்பட்டோம். அதனால் எமது ஆட்சி மிகவும் நியாயமானது சாதாரணமானது என நாங்கள் நம்புகிறோம். அந்த நியாயமான நடவடிக்கைகளுடன் நாங்கள் எதிர்பார்த்த விடயம் இடம்பெறவில்லை.
என்றாலும் இன்று நீங்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டத்தை அல்ல. மாறாக நீங்கள் தோற்கடித்திருப்பது உங்களது மனசாட்சியின் வரவு செலவு திட்டத்தையாகும். என்றாலும் எமது அரசியல் மாற்றமானது. ஆரம்பத்திலும் மாற்றமானது. இறுதியிலும் மாற்றமானது நாளைய தினமும் அவ்வாறே மாற்றமானதாகும். அந்த மாற்றத்தை நாங்கள் பாதுகாப்போம்.
எமக்கு ஆதரவாக எதிராக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களையும் நாங்கள் மதிக்கிறோம். அதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நீங்கள் வீடுகளுக்கு சென்று, கொழும்பு நகரசபையின் பெருமைக்கு, கொழும்பு நகர மக்களின் பெருமைக்கு என்ன செய்தீர்கள் என நீங்கள் உங்களையே கேட்டுப்பாருங்கள்.
இறுதியாக சொல்ல விரும்புவது, மோசமானவர்கள் கெட்ட செயலை செய்வது, அது சாதாரண விடயமாகும். ஆனால் நல்லவர்கள், கூடாத விடயம் ஒன்று இடம்பெறும்போது, அதற்கு இனங்குவதுதான் இதனை விடவும் பயங்கரமானதாகும். அதனால் உங்களுடன் இணைந்து எதிர்காலத்திலும் கொழும்பு வாழ் மக்களுக்கு சாதாரணமான ஆட்சியை கொண்டு செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
