அரசியல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவுடன் ஹிஸ்புல்லாஹ் எம்.பி சந்திப்பு..!
காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களுக்கும், கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (22) பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்கால அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விளக்கங்களை வழங்கினார்.
மேலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது களப்பணிகளில் ஈடுபட்ட மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தனது நன்றிகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தவிசாளர், உதவித்தவிசாளர், உறுப்பினர்கள், மண்முணைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-- ஊடகப்பிரிவு
