கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்
முறைகேடுகளை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பட்டயக் கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் அரசுச் சொத்துகளை குற்றவியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
