Our Feeds


Sunday, December 14, 2025

Zameera

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் மேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம் நாளை நடைபெறும்


 ஜனாதிபதி நிதியத்தினால் செயல்படுத்தப்படும் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம், நாளை ஞாயிற்றுக்கிழமை (14) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த  க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன், ஜனாதிபதி நிதியத்தால் 36.1 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »