அனர்த்த நிலைமைக்கு முன்னாயத்தம் இல்லாமை குறித்து முழுமையான ஆய்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான பிரேரணையொன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், இலங்கை வரலாற்றின் மிக மோசமான துயரமாகக் கருதப்படும் 'டித்வா' புயலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முழுமையான ஆய்வு செய்து அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தின் மூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
