பசறை - மடுல்சீமை வீதியில் மெட்டிகஹதென்ன பகுதியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்காரணமாக பசறை - மடுல்சீமை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சரிந்து விழுந்த கற்களை அகற்றும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த வீதியில் தொடர்ந்து கற்கள் சரிந்து விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் எஸ்.எஸ். ஹேன்நாயக்க தெரிவித்துள்ளார்.
