Our Feeds


Wednesday, December 24, 2025

Zameera

“மிதிகம லசா” படுகொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது!


 “மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »