அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவீடு
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயண நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிடாதிருக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்திருந்தது.