Our Feeds


Saturday, January 31, 2026

Zameera

20 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு


 கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,032,804 வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று (30) அழிக்கப்பட்டன. 

இலங்கை சுங்கப்பிரிவின் ஏற்பாட்டில், கெரவலப்பிட்டிய கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இவை அழிக்கப்பட்டன. 

இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் சந்தை பெறுமதி 305 மில்லியன் ரூபா ஆகும். 

இந்தத் தொகுதி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு 271 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்பட்டிருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »